உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது:
முன்னதாக, 2022 பேரவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறியிருந்தேன். ஆனால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை பார்க்கும் போது வருகின்ற 400 தொகுதியில் கூட வெற்றி பெறுவோம்.
இதையும் படிக்க | பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: அசாம் - மிசோரம் கூட்டறிக்கை
பாஜக செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்து, கடந்த சமாஜவாதி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களாகும். நான்கு ஆண்டுகளாக பாஜக எந்தவொரு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தவில்லை.
மேலும் பாஜகவின் அரசாங்கம், கரோனா மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதில், போலீஸ் காவலில் உயிரிழப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பது, வேலை கேட்கும் இளைஞர்களை அடிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பான இடம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யனாதிற்கு மடிக்கணினி உபயோகிக்க தெரியாது என்ற காரணத்தால், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


