கோவாவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறுகையில்,
கோவாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைப் பார்க்கும்போது, ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக தடை செய்துள்ளது.
மேலும், அனைத்து தொழில்துறை ஆக்ஸிஜன் தேவைகளும் கோவா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் கரோனா மருத்துவமனைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கரோனா மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு உணவு வழங்குதலைக் கையாளும் வகையில் மாநில அரசு தனியார் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது என்றார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 927 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. மொத்தம் 65,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 868 தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


