ஆப்கன் தலைநகர் காபூலில் கராபாக் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் சப்ஸ் சாங் கிராமத்தில் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு சுரங்கத்தைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. காபூலின் பாக்மான் மாவட்டத்தில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
வெடிமருந்துகள் நிறைந்த கார் ஒன்று ராணுவ வாகனம் அருகே வெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் 12 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் இதுவரை 307 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிப்ரவரியில் 264 பேர் உயிரிழப்பும், 278 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


