ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: உத்தவ் தாக்கரே இன்று ஆலோசனை

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

News image

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: உத்தவ் தாக்கரே இன்று ஆலோசனை

Updated On :2 ஏப்ரல் 2021, 7:28 am

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

முதல்வரின் வர்ஷா இல்லத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சில அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். 

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,183 பேருக்குத் தொற்றும், 249 பலியும் பதிவாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா பாதிப்பும், பலியும் அதிகளவில் பதிவாகி வருகின்றது. தற்போது 3,67,897 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

கரோனா தொற்று தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், மகாராஷ்டிரத்தில் விரைவில் கரோனா படுக்கைகளுக்குப் பற்றாக்குறை சந்திக்க நேரிடலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பரவல் குறித்து இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.