பனாஜி: ஒரு மாதத்திற்கும் மேலாக கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த கோவாவில் மீண்டும் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநிலச் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கோவா திரும்பியவர்கள் ஆவர். ஏழு பேரும் பாண்டாவில் உள்ள கரோனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைத் தவிர, அவர்களுடன் வந்த ஓட்டுநர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த டிரக் ஓட்டுநருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. தொற்றுநோயைத் தொடர்ந்து கோவாவுக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயம் உடல் வெப்பநிலை மற்றும் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவாவில் புதிதாகப் பாதிக்கப்பட்ட ஏழு வழக்குகளும் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், பரவுவதற்கான எந்த பயமும் இல்லை மக்கள் பயன்கொள்ளத் தேவையில்லை என்று அந்த நாட்டு முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
கோவாவில் முன்னதாக கரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து எந்த தொற்றும் கண்டறியப்படவில்லை. கரோனா இல்லாத நாடாக இருந்த கோவா, தற்போது புதிதாகப் பாதித்தோரால், பசுமை மண்டலம் என்ற நிலையை இழந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


