பெங்களூரு: மாற்றியமைக்கப்பட்ட அரசுப்பேருந்துகளை நடமாடும் கரோனா சோதனை நிலையங்களாக பயன்படுத்தும் திட்டத்தினை கர்நாடகா முதல்வர் எடியூரப்பா செவ்வாயன்று துவக்கி வைத்தார்.
கர்நாடக மாநில அரசுப் பேருந்துக் கழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருந்துகள், அம்மாநில பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் முயற்சியினால், கரோனா தொற்றினைக் கண்டறிய வழிசெய்யும் காய்ச்சல் சோதனைக் கூடங்களாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. . அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பேருந்துகளின் பயன்பாட்டினை மாநில முதல்வர் எடியூரப்பா செவ்வாயன்று துவக்கி வைத்தார்.
இந்தப் பேருந்துகளில் காய்ச்சல் சோதனை செய்யும் வசதியுடன், ரத்தம் மற்றும் புரதச் சத்து சோதனைகளையும் ஒரே சமயத்தில் செய்ய இயலும். இந்த பேருந்தில் ஒரு மருத்துவர், மூன்று செவிலியர்கள் மற்றும் ஒரு ஆய்வக ஊழியரும் இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு தன்னார்வலர்களும் அதில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.
ஐந்து பேருந்துகளில் ஒன்று மாநில காவல்துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்து கொள்வதற்கு பயனபடுத்தப்படும்.
மீதமுள்ள நான்கு பேருந்துகள் மாநிலத்தில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


