புது தில்லி: மார்ச் 31 அன்று மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதில் எந்த விதிமுறை மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்து.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 31 அன்று மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதில் எந்த விதிமுறை மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்து.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் செவ்வாயன்று (மார்ச் 31 ) ஓய்வு பெறும் வயதை எட்டும் அரசு ஒழியர்கள், அவர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்தாலும், வீட்டில் இருந்து பணி புரிந்தாலும், அரசுப் பணி விதி 56–இன் படி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


