பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆந்திரத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு; மாணவர் சேர்க்கை தொடங்கியது

ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்த மாணவர் சேர்க்கை தொடங்கி அடுத்த 40 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஆந்திரத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு; மாணவர் சேர்க்கை தொடங்கியது

Updated On :28 ஜூலை 2020, 11:00 am


விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்த மாணவர் சேர்க்கை தொடங்கி அடுத்த 40 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு, மாணவர்களின் பெற்றோர் மட்டுமே வந்து சேர்க்கை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை, ஆன்லைன் வகுப்பை மேற்கொள்ள வசதி இருக்கும் மாணவர்கள், வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோ வசதி இருக்கும் மாணவர்கள், எந்த வசதியும் இல்லாத மாணவர்கள் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், வேறு பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்பும் பெற்றோருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கவும், ஒரு பள்ளியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களிடம் எந்த சான்றிதழும் கோராமல் (அடையாளச் சான்று மட்டும் ) சேர்க்கை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டு நெறிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.