மத்தியப் பிரதேசத்தில் ஆளும் ஷிவ்ராஜ் சௌகான் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் உள்பட போபாலில் 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது கமல்நாத் தலைமையிலான 15 மாத கால ஆட்சியைக் கவிழ்க்க பேருதவி செய்தவர்களில் இந்த அமைச்சரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று முதல்வர் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சருடன் பல்வேறு துறை அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதையும் படிக்கலாம்.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை தொடக்கம்
இவர் செவ்வாய்க்கிழமை லக்னௌவில் நடைபெற்ற மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்றிருந்தார்.
மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே 4 பாஜக எம்எல்ஏக்கள், 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பல முன்னாள் அமைச்சர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
போபாலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 215 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 4900 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் கரோனாவுக்கு 149 பேர் பலியாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


