லக்னௌ: நொய்டாவில் மருத்துவர் ஒருவர் கரோனாவில் இருந்து மீண்டு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கௌதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு பல முறை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில், அவருக்கு இரண்டாவது முறை கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு கடந்த மே மாதம் 15ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாள்கள் சிகிச்சை பெற்று மே 30-ம் தேதி கரோனா இல்லை என்பது இரண்டு முறை உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் வீட்டுக்கு வந்து இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பிறகுதான் அவர் மீண்டும் பணிக்கு வந்தார்.
இந்த நிலையில், பணிக்குச் சேர்ந்த இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், அவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதை உணர்ந்தார். ஆனால் காய்ச்சலோ இருமல் போன்ற அறிகுறிகளோ தென்படவில்லை.
முன்னெச்சரிக்கையாக, அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் அவரது சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு அதனை உறுதி செய்ய மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டு, அப்போது அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இரண்டாவது முறை கரோனா பாதிப்பது என்பது வெகு அரிது, ஒரு வேளை அவர் முதல் முறை கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் போது முழுமையாகக் குணமடையாமல் இருந்திருக்கலாம்.
ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் போது அவர்களது உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, இரண்டாவது முறை நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. சிலருக்கு அந்த நோய் எதிர்ப்பு சக்தி விரைவாகவே குறைந்துவிடும்போது இவ்வாறு நேரிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


