பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை: கர்நாடக அமைச்சர்

கரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள், பிளாஸ்மா தானம் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்

News image

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை: கர்நாடக அமைச்சர்

Updated On :16 ஜூலை 2020, 5:46 am

பெங்களூரு: கரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள், பிளாஸ்மா தானம் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வீடு வீடாகச் சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து காய்ச்சல் மற்றும் அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

கரோன தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. குடிசைப் பகுதிகளில் கரோனா தொற்றாளர்கள் அரசு மையங்களில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 10 முதல் 15 நாள்களுக்கு ஒவ்வொரு பரிசோதனைக் கூடங்களும் ஆயிரத்துக்கும் குறையாமல் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 58 மருத்துவக் கல்லூரிகளில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.