பின்ட்: மத்திய பிரதேசத்தில் அடிபம்பு நிறுவக் கோரி மனு கொடுத்த விவசாயிக்கு நேர்ந்த அவமானம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய பிரதேசம் பின்ட் மாவட்டம் ரஹாவளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் தீக்சித். இவர் எட்டு மாதங்களுக்கு முன்னதாக தனது வீட்டிற்கு அருகே அடிபம்பு நிறுவக் கோரி மாநில பொது சுகாதார பொறியியல் துறையில் மனு கொடுத்துள்ளார். அதற்கான பணிகள் துவங்கிய நிலையில் முழுமையடையாமல் பணியாளர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
எனவே கடந்த மாதம் 7-ஆம் தேதியன்று அவர் மற்றொரு புகார் மனுவினை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஒருமாதம் கடந்த நிலையில் ஜூலை 9-ஆம் தேதியன்று அவருக்கு வந்த பதிலானது அவரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
ராகுலுக்கு வந்த பதிலில், ‘இந்த புகாரினை அளித்துள்ளவர் பைத்தியம் போல் நடந்து கொள்கிறார்; அவரை வலிப்பு நோயும் தாக்குகிறது. அங்குள்ள அடி பம்பு வேலை செய்கிறது. ஆனால் இவரது மூளைதான் வேலை செய்யவில்லை. இது ஒட்டுமொத்த பொது சுகாதார பொறியியல் துறைக்கும் தெரியும். இப்போது சீனாவின் கொரில்லா போர் முறையில் பதிலடி தரும் நேரம். அங்குள்ள அடிபம்பை பிடுங்கி புகார் கொடுத்தவரின் நெஞ்சில் நட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மன வேதனையடைந்த ராகுல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கவனதிற்கு இதைக் கொண்டு சென்ற பின்னர், அத்துறையின் செயற் பொறியாளரான கோயல், ’இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்துவோம். மாவட்ட ஆட்சித் தலைவரான வீரேந்திர ராவத்திடமும் பேசியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
துறையின் இணையதளத்தில் இருந்து அந்த பதில் நீக்கப்பட்ட அதேசமயம் ராகுல் வீட்டில் அடிபம்பு அமைக்கும் பணிகள் உடனடியாகத் துவங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்

கிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு

மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்! மே 1-ல் ஆற்றில் அழகா் இறங்கும் வைபவம்

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


