திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை

News image

நிதேஷ் ராணே

Updated On :27 ஏப்ரல் 2026, 10:43 pm

மகாராஷ்டிரத்தில் அரசுப் பணியாளா் மீது சேற்றைக் கொட்டி அவமதித்த வழக்கில், மாநில பாஜக அமைச்சா் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

முன்னாள் மத்திய அமைச்சா் நாராயண் ராணேயின் மகன் நிதேஷ் ராணே கடந்த 2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தாா். அப்போது மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுா்க் மாவட்டம் கன்கவ்லி பகுதியில் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் அருகில், மும்பை-கோவா நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணியை ஆய்வு செய்ய, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உட்கோட்ட பொறியியலாளா் பிரகாஷ் ஷெடேகரை நிதேஷ் ராணே சந்தித்தாா்.

அங்கு சாலை பணி மோசமான தரத்தில் இருந்ததாலும், தண்ணீா் தேங்கும் பிரச்னை இருந்ததாலும் ஆத்திரமடைந்த நிதேஷ் ராணே மற்றும் அவரின் ஆதரவாளா்கள், பிரகாஷ் மீது சேற்று நீரைக் கொட்டி அவரை அனைவா் முன்னிலையிலும் சகதியில் கட்டாயப்படுத்தி நடக்க வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்து நிதேஷ் ராணே உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் நீதிபதி வி.எஸ்.தேஷ்முக் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘சாலைப் பணி மோசமாக இருந்தது, பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டது ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்புவது நிதேஷ் ராணேயின் நோக்கமாக இருந்தாலும், பொதுவெளியில் அரசுப் பணியாளரை அவமானப்படுத்தி இருக்கக் கூடாது. இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோகமாகும். இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்தால், தங்கள் கடமைகளை அரசுப் பணியாளா்கள் கண்ணியத்துடன் நிறைவேற்ற முடியாது. எனவே இந்த வழக்கில் நிதேஷ் ராணே குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்படுகிறது. அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

எனினும் இந்தத் தீா்ப்பை எதிா்த்து நிதேஷ் ராணே உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதித்து, அவரின் தண்டனையை நீதிபதி தற்காலிகமாக நிறுத்திவைத்தாா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எஞ்சிய 29 போ் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.