அறிவுக்கும் திறனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் சிலர் குழப்பிக் கொள்வார்கள் என்று கூறியிருக்கும் பிரதமர் மோடி, அறிவுக்கும் திறனுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளார்.
சர்வதேச இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, சர்வதேச இளைஞர் திறன் தினத்தில், அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கரோனா பேரிடர் காலத்தில் நமது வேலை வாய்ப்புகளும், அதனை செய்யும் முறையும் மாற்றம் கண்டுள்ளது. இதனால், புதிய தொழில்நுட்பங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சமயங்களில் இளைஞர்கள் புதிய திறனை வளர்த்துக் கொள்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
திறன் என்பது நமக்கு நாமே அளிக்கும் ஒரு பரிசு. அது அனுபவத்தின் மூலம்தான் வளர்கிறது. திறனுக்கு எந்த காலமும் கிடையாது, காலம் செல்ல செல்ல திறன் வளர்ந்து கொண்டே இருக்கும். திறன் என்பது தனித்துவம் மிக்கது, அது பிறரிடம் இருந்து உங்களை தனித்துக் காட்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் சம்பாதிக்க மட்டுமே திறனைப் பயன்படுத்தக் கூடாது வேலை வாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், சிலர் எப்போதுமே அறிவையும் திறனையும் குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு நான் அது குறித்து விளக்குகிறேன், அதாவது, சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று புத்தகம் மூலம் படிப்பதும், இணையதளத்தில் பார்ப்பதும் அறிவை வளர்க்கும். ஆனால், ஆனால் இதை எல்லாம் செய்வதால் நீங்கள் சைக்கிளை ஓட்ட முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது, உண்மையிலேயே நீங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு உங்களுக்கு திறன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை
கர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது

தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகள்! பொதுமக்கள் அவதி!
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


