/

உ.பி.யில் கடந்த 20 நாளில் 12 லட்சம் கரோனா பரிசோதனைகள்: சுகாதாரத் துறை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 12,31,939 கரோனா வைரஸ் சோதனைகளை எடுத்துள்ளதாக அந்தநாட்டு தேசிய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image

corona test

Updated On :15 ஜூலை 2020, 7:11 am

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 12,31,939 கரோனா வைரஸ் சோதனைகளை எடுத்துள்ளதாக அந்தநாட்டு தேசிய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 6 லட்சம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 24 வரை மொத்தம் 6,03,390 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 20 நாள்களில் மட்டும் சோதனைகள் இரட்டிப்பாக 12,31,939 பேருக்கு கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உ.பி.யின் சுகாதாரத்துறை அமைச்சகம் சுட்டுரையில் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி,
மாநிலத்தில் மொத்தம் 39,724 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 24,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். 24,983 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 983 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.