புது தில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தேசப்பற்று போலியானது என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோட்டில் பாஜக மாவட்ட அலுவலகத் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசியதாவது:
இந்தியா மற்றும் சீனா இடையே டோக்லாம் எல்லைப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த சமயத்தில் ராகுல் காந்தி இந்தியாவிற்கான சீனத் தூதரை சந்தித்தது நாட்டிற்கே தெரியும். அதிலும் அதனை வெளியே கூறாமல் ராகுல் தேசத்தை தவறாக வழிநடத்தினார். சீனத் தூதர் ராகுலுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த பிறகே அது அனைவருக்கும் தெரிய வந்தது. எனவே தேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போலியானது. பாதுகாப்புத் துறை தொடர்பான 11 கூட்டங்களை நீங்கள் புறக்கணித்துள்ளீர்கள். இதுதான் ஒரு நாட்டை நடத்தும் முறையா?
இவ்வாறு பேசிய அவர் தேசத்தை வலுப்படுத்துவதற்காக பாஜகவில் இணையும்படி மற்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


