ஹைதராபாத்: கரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ 1 லட்சம் கட்டணமாக செலுத்த இயலாத பெண் மருத்துவர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் சுல்தானா. இவருக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்னதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து வீட்டில் தன்னைத்தானே அவர் தனிமைப்படுதிக் கொண்டுளார். அதன்பின்னர் கடந்த 1-ஆம் தேதியன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக சதேர்காட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஒரு நாள் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மறுநாள் 2-ஆம் தேதியன்று அவரை ரூ. 40 ஆயிரத்தை காப்புத் தொகையாக செலுத்துமாறு மருத்துவமனை கூறியுள்ளது, அத்துடன் அவருக்கு ஒரு நாள் சிகிச்சைக் கட்டணமாக ரூ. 1.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்துக் கேள்வி கேட்டு, பணம் செலுத்த இயலாது என்று கூறியபோது அவரை அங்கு ஒரு அறையில் இருக்க வைத்துள்ளனர். அத்துடன் ஞாயிறு அதிகாலையில் ரூ. 1.30 லட்சத்தை கட்டணமாக செலுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக அவரது புகாரை விசாரித்த சதேர்காட் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ், ‘சுல்தானா அந்த மருத்துவமனையில் அடைத்து வைக்கப்படவில்லை; நாங்கள் அங்குள்ள சிசிடிவி பகுதிகளை முழுமையாக ஆராய்ந்து விட்டோம். எனவே அவரது புகாரின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


