நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.80% ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 4.52% ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் நேற்று 60.73% ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி அது 60.80% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், நாட்டில் கரோனா பாதித்து குணமடைவோர் மற்றும் மரணம் அடைவோர் விகிதாச்சாரம் 95.48% : 4.52% என்ற அளவில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. கான்பூர்: தாயைப் போல வளர்த்து வந்த பெண் உயிரிழந்ததால் தற்கொலை செய்து கொண்ட நாய்
இதுபற்றி அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாலும், விரைவாக கரோனா நோயாளிகளைக் கண்டறிவதாலும் நாள்தோறும் குணமடைவோர் விகிதம் உயர்ந்து வருகிறது.
நாட்டில் கரோனா பாதிப்பு இருபது ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இதன் காரணமாக நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 379 பேர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,033 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,79,891 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 60.73% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் 2,26,947 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையின் வித்தியாசம் 1,32,912 ஆக உள்ளது.
பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சையளித்தல் எனும் யுத்தியின் அடிப்படையில், பரிசோதனை எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,41,576 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 92,97,749 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள 775 அரசு ஆய்வகங்கள், 299 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 1,074 ஆய்வகங்கள் உள்ளன" என்று மத்திய சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


