புணே: வரும் மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று மகாராஷ்டிர அமைச்சர் விஜய் வாடேதிவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மத்திய அரசிடமிருந்து மகாராஷ்ரத்திற்கு நிதியுதவி எதுவும் கிடைக்கவில்லை. யாரவது ஒரு தலைவர் மாநிலத்திற்கு நிதியுதவி கிடைப்பதாகக் கூறினால் அவர்கள் இந்த மாநிலத்தை எமாற்றுகிறார்கள் என்று அர்த்தம். அதேநேரம் மாநிலத்தில் கரோனா தொற்று சூழலைக் கவனிக்க இயலாத அளவிற்கு நிதிச் சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.
அதேநேரம் சூழல் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்றால் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்க வேண்டிய நிலையை நோக்கி மாநில அரசு செல்கிறது. ஒருசில துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகளில் செலவுகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மாணவர்களுக்கு நிதியுதவி அழைக்கும் சார்தி திட்டத்திற்கு பாதிப்பு என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, தகவல் பரப்புகிறார்கள். அதில் அரசியல் செய்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. மாணவர்களுக்கு நிதியுதவி தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


