நடிகர் ஷபானா ஆஸ்மி சமீபத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் உடல்நலம் தேறி வர அவரது ரசிகர்களும் உறவினர்களும் பிரார்த்தி வரும் நிலையில், ஒருவர் அவரைக் குறித்து தொடர்ந்து எதிர் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.
தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதை தலா ஐந்து முறை வென்ற மூத்த நடிகர் ஷபானா ஆஸ்மி, ஜனவரி 18 அன்று மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்தில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் உள்ளார்.
இதையடுத்து, நடிக்கைக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு அரசு ஆசிரியர் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தாத்ரி பகுதியில் உள்ள ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். தற்போது அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையின் பகுதியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கெளதம் புத்தர் நகர் பேசிக் சிக்ஷா அதிகாரி (பி.எஸ்.ஏ) பால் முகுந்த் பிரசாத் இது குறித்து பேசுகையில், "அந்த ஆசிரியர் தனது பேஸ்புக் பதிவில் ஆட்சேபகரமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்த விஷயம் எங்கள் பார்வைக்கு வந்தது, அவரது கருத்து உத்தரபிரதேச அரசு ஊழியர்களுக்கான சேவை வழிகாட்டுதல்களை மீறுவதாகும்" என்று கூறினார்.
ஆசிரியர் காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்வித் துறையால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
75 வயதான அஸ்மி விரைவில் மரணமடைய வேண்டும் என்பது போன்ற பதிவுகளை எழுதினார் ஆசிரியர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


