/

முகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் 7 கி.மீ. தூரம் காரை ஓட்டி வந்து புகார் கொடுத்த பெண்

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலை மற்றும் முகத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 42 வயது பெண் ஏழு கி.மீ. தூரத்துக்கு காரை ஓட்டி வந்து, தனது சகோதரன் மீது காவல்நி

News image
Updated On :17 ஜனவரி 2020, 9:17 am


பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலை மற்றும் முகத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 42 வயது பெண் ஏழு கி.மீ. தூரத்துக்கு காரை ஓட்டி வந்து, தனது சகோதரன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சண்டிகர் அடுத்த முக்த்சர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமீத் கௌர் அளித்திருக்கும் புகாரில், நிலத் தகராறில் தனது சகோதரனும், அவரது 10வது படிக்கும் மகனும் தன்னையும், தனது தாய் சுக்பிந்தர் கௌரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதாகக் கூறியுள்ளார்.

தனக்கும், தனது தாய்க்கும் சொந்தமான நிலத்தை சகோதரன் அபகரிக்க முயற்சிப்பதாகவும், அதற்காக தங்களைக் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் சுமீத் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு தனக்கும், தாய்க்கும் சேர்த்து 16 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த நிலத்தையும் சகோதரனே அபகரிக்க முயற்சிப்பதாகவும், ஏற்கனவே ஒரு முறை தங்கள் இருவரையும் அவன் கொல்ல முயன்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுமீத் கௌர் மற்றும் சுக்பிந்தர் கௌரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவர்களது உடல்களில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து சிறார் மற்றும் அவரது தந்தை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.