மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி

பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

News image

பிரியங்கா காந்தி

Updated On :26 பிப்ரவரி 2020, 11:43 am

புது தில்லி: பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளி மாலை துவங்கி நடைபெற்று வரும்  வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லி வன்முறைச் சம்பவங்களை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தில்லி வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறப்பு செயற்குழு கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துக் கூறியதாவது:

பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது அவரது பேச்சைப் போலவே வெட்கக்கேடானது. எந்த வமுறை சம்பவங்களிலும் ஈடுபடாமல், எச்சரிக்கையுடன் இருந்து சமாதானத்தை பேணிக்காக்க வேண்டும் என்று தில்லி மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு வேளை தில்லியைத் தொடந்து அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் வன்முறை பரவுகிறது என்றால், தங்களால் இயன்ற எல்லா முறையிலும்  அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அங்குள்ள காங்கிரஸ்  கட்சித் தொண்டர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளோம்.   

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.