மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

முன்னாள் காதலி படத்துடன் ஹோலி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் கைது!

முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்கவிருப்பதை அறிந்து பழிவாங்கும் நோக்கத்துடன் அவருடன் இருப்பது போன்று படத்தை உருவாக்கி, ஹோலி வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

News image

இளைஞர் கைது

Updated On :25 பிப்ரவரி 2020, 2:31 pm

ரே பரேலி: முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்கவிருப்பதை அறிந்து பழிவாங்கும் நோக்கத்துடன் அவருடன் இருப்பது போன்று படத்தை உருவாக்கி, ஹோலி வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் அருகில் உள்ள சலோன் பகுதியைக் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.  இந்நிலையில் அந்தப்  பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் வரும் வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தகவலையறிந்து கோபம் கொண்ட மனோஜ் குமார் அப்பெண்ணை பழிவாங்கத் திட்டமிட்டார். எனவே அந்தப் பெண்ணும் தானும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை மார்பிங் செய்து உருவாக்கினார். பின்னர் அந்தப் படங்களுடன் ஹோலி  வாழ்த்து போஸ்டர்களை தயாரித்து அந்தப் பெண் வசிக்கும் சலோன் பகுதியில் ஓட்டினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாக காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் மனோஜ் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிரதாப்கர் என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் மறைந்திருந்த அவரை 'ஆன்ட்டி ரோமியோ' பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.