ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காகக் கைதான காவலர் தேவேந்தர் சிங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் கதுவா சிறையில் அடைக்கப்பட்டார்.
தேவேந்தர் சிங் மற்றும் அவருடன் கைதான 4 பயங்கரவாதிகளையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தேவேந்தர் சிங் கதுவாவில் உள்ள ஹீராநகர் சிறையிலும், ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நவீத் பாபு உட்பட மற்ற நால்வரும் ஜம்முவில் உள்ள கட்பல்வால் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தனது தலைமையிலான படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில் கைதான பல பயங்கரவாதிகள் கட்பல்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அங்கு தன்னையும் அடைத்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் வேறு சிறையில் அடைக்குமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் கத்வா சிறையில் அடைக்கப்பட்டார்.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து பயங்கரவாதிகள் தப்புவதற்கு உதவியதாக, காஷ்மீா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் தேவேந்தா் சிங், கடந்த மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருடன் காரில் பயணித்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நவீத் பாபு உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு ஜம்மு-காஷ்மீா் போலீஸாரிடம் இருந்து என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை கூறியது: நவீத் பாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம் அமைக்கவும், பதுங்குமிடங்களுக்கு ஏற்பாடு செய்யவும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத்துடன் தொடா்பில் இருந்ததாக வாக்குமூலம் அளித்தாா். அதன் அடிப்படையில் நவீத் பாபுவுடனான தொடா்பு குறித்து ரஷீத்திடம் விசாரணை நடத்துவதற்காக, அவருக்கு சம்மன் அனுப்ப அனுமதி கோரி விரைவில் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம். இது கடுமையான குற்றம் என்பது உறுதி. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.
அவாமி இத்தேஹாத் கட்சித் தலைவரான ரஷீத், கடந்த 2014-ஆம் ஆண்டு வடக்கு காஷ்மீரில் உள்ள லங்கேட் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாா். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொருள் உதவி செய்தது தொடா்பான வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட அவா், தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


