சண்டிகர்: விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள ஹரியாணா தயாராகி வருவதாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்துளார்.
ஹரியாணாவின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதல் சேதத்தை உண்டாகியுள்ளதாகத் தகவல்கல் வெளியாகின. இதையடுத்து அண்டை மாநிலமான ஹரியாணா வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இதுதொடர்பாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளதாவது:
இந்த சூழலை எதிர்கொள்ளவும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்தும் பொருட்டு விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் தங்கள் நிலத்தை ஆய்வு செய்து வெட்டுக்கிளித் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப்புற மாவட்டங்களான சிஸ்ரா, பதேபாத் மற்றும் ஹிஸார் உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நமது அண்டை நாடான பாகிஸ்தானில் வெட்டுக்கிளித் தாக்குதலின் காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


