மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜெருசலேம்: கார் மோதியதில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயம் 

மத்திய ஜெருசலேம் பகுதியில் நடைபாதை மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர். 

News image
Updated On :6 பிப்ரவரி 2020, 10:22 am

மத்திய ஜெருசலேம் பகுதியில் நடைபாதை மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர். 

ட்ரம்பின் அமைதி திட்டம் தொடர்பாக பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் ஜெருசலேமில் இந்த விபத்து நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து இஸ்ரேல் போலீஸார் கூறுகையில், 

ஜெருசலேமின் மத்திய பகுதியில் பிரபல ஓட்டல்கள் உள்ள டேவிட் ரெமிஸ் சாலைக்கு அருகே வாகனத்தை ஓட்டி வந்த நபர் நடைபாதையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளார்.

இந்த விபத்தில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளன. வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

இது, தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.