ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 850 ஆசிரியர்கள், போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை அளித்து பதவி உயர்வு பெற்றிருப்பது கல்வித் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலி பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில் தொடர்புடைய ஜோத்பூர் மண்டல ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்த கல்வித் துறை, அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 850 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த பட்டியல் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், 124 சமஸ்கிருத ஆசிரியர்களும், 252 கணித, 275 ஆங்கில, 189 ஹிந்தி ஆசிரியர்களும் அடங்குவர்.
இந்த ஆசிரியர்கள் அனைவரும் போலியான பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றிருப்பதும், இவர்கள் ஜோத்பூருக்கு வெளியே இருக்கும் பல்கலைக்கழகங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாக சான்றிதழ் அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவு

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்’ வைப்பு

ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


