கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

டிச.10-இல்புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா: பிரதமர் மோடி பங்கேற்பு

புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லா சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
டிச.10-இல் பிரதமர் மோடி பங்கேற்கும் புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN

புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லா சனிக்கிழமை தெரிவித்தார்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. இதில் முக்கோண வடிவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே அமைக்கப்படவுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ரூ.861.9 கோடி செலவில் கட்டித்தருவதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளதாக மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லா சனிக்கிழமை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல்நாட்டுவார் என ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.