/

ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்வதில் பின் தங்கும் உத்தரப்பிரதேசம்

கரோனாவைக் கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு தொடர்ந்து பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:34 pm

UNI


லக்னௌ: கரோனாவைக் கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு தொடர்ந்து பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.

ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்வதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளது.

சுமார் 24 கோடி மக்கள் தொகைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், இதுவரை 4.84 சதவீத மக்களே தங்களது செல்லிடப்பேசியில் ஆரோக்கிய செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கட்டாயம் ஆரோக்கிய செலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், ஓரளவுக்கு அங்கு செயலியை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 2,134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 39 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.