/

ஔரங்காபாத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா: பாதிப்பு 95 ஆக உயர்வு 

ஔரங்காபாத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:33 pm

UNI

ஔரங்காபாத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாகி கணன் யேலிகர் தெரிவித்துள்ளார். 

உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. அந்தவகையில் ஔரங்காபாத்தில் கரோனா பாதிப்பு 98 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 13 பேரில், 12 பேர் கிலேர்க் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். ஒருவர் பவிசிங்புரா பகுதியைச் சேர்ந்தவர். 

நேற்று ஒரே நாளில் மட்டும் 29 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்குள், நகரத்தில் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை, 6 பேர் உயிரிழந்த நிலையில், 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.