விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு 3-வது பலி

உத்தரப் பிரதேசத்தில், வாராணசியில் கரோனா தொற்று பாதித்து 55 வயதான முதியவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 

News image
Updated On :6 ஏப்ரல் 2020, 7:03 am

உத்தரப் பிரதேசத்தில், வாராணசியில் கரோனா தொற்று பாதித்து 55 வயதான முதியவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட தலைவர் கௌஷல் ராஜ் சர்மா கூறுகையில், 

வாராணசியில் வசிக்கும் 55 வயது முதியவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். மேலும், பலியானவரின் குடும்பத்தில் உள்ள 10 பேர் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கங்காப்பூர் பகுதியில் வசித்து வந்தவர். 

மேலும், மக்களின் பாதுகாப்பு கருதி மிர்ஷா முராத் காவல் நிலையத்தின் கீழ் உள்ள தஷஸ்வமேத், பெலூப்பூரின் கீழ் உள்ள பஜார்டிஹா, கங்காப்பூர் மற்றும் லோட்டா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் அமித் மோகன் பிரசாத் கூறுகையில், 

உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர் இவர் ஆவார். கடந்த மார்ச் 22 முதல் அவரின் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது உறுதியானது.

தில்லியில் நடைபெற்ற தப்லீத் மாநாட்டிற்குச் சென்றுவந்ததால் மேலும் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.