'நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்' - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பாஜக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி அவர்களின் 69வது பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
My best wishes to Narendra Modi Ji on his 69th birthday. May he be blessed with good health and happiness always
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...