வழக்கறிஞர்களின் நலனை மேம்படுத்தும் விதமாக, சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கெஜ்ரிவால் அரசு, தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
அடுத்ததாக, நீதித்துறையில் பணிபுரிபவர்களுக்கு கெஜ்ரிவால் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளது. அதன்படி, வழக்கறிஞர்களுக்கு ரூ.50 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வழக்கறிஞர்களுக்கான திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆளுநர் அனில் பைஜால், தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னரே, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


