ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தொகுதிக்குச் சென்றதை விட அதிக முறை வெளிநாடுகளுக்குச் சென்றவர்: ராகுலைச் சீண்டும் பாஜக

தொகுதிக்குச் சென்றதை விட அதிக முறை வெளிநாடுகளுக்குச் சென்றவர் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் குறித்து பாஜக விமர்சித்துள்ளது.

News image

ராகுல் காந்தி

Updated On :31 அக்டோபர் 2019, 12:27 pm

புது தில்லி: தொகுதிக்குச் சென்றதை விட அதிக முறை வெளிநாடுகளுக்குச் சென்றவர் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் குறித்து பாஜக விமர்சித்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளரான நரசிம்ம ராவ் தில்லியில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காரணம் சொல்லப்படாத ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அவர் கூறியதாவது:

2014-ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை ராகுல் காந்தி 16 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அவற்றில் 9 பயணங்களுக்கு  காரணம் என்ன என்பது வெளியே சொல்லப்படவில்லை. தனது தொகுதிக்குச் சென்றதை விட அதிக முறை வெளிநாடுகளுக்குச் சென்றவர் ராகுல் காந்தி. அதன்காரணமாகவே அமேதி மக்கள் அவரைத் தோற்கடித்துள்ளனர்.

அரசு விதிகளின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது வெளிநாட்டுப்பயணங்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இவ்வருடம் ஜூலை மாதம் எல்லா எம்.பிக்களிடமும், தங்களது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவர் எத்தனையும் மறைக்க கூடாது. அத்தனை ரகசியம் என்பது என்?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.