ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராகிறார் அஜித் பவார்? சமாதானத்திற்கு கிடைத்த பரிசு!

மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை செவ்வாயன்று ராஜிநாமா செய்த அஜித் பவார் மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News image

அஜித் பவார் - சுப்ரியா சுலே

Updated On :27 நவம்பர் 2019, 11:27 am

மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை செவ்வாயன்று ராஜிநாமா செய்த அஜித் பவார் மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி அரசியல் திருப்பங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தலையீட்டின்  எதிரொலியாக மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) அஜித் பவார் செவ்வாயன்று ராஜிநாமா செய்தார். அவரது நெருங்கிய உறவினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெடர்ந்து சந்தித்து பேசியதே  அதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது.

குடும்பத்தினர் சார்பாக தரப்பட்ட உணர்வுபூர்வமான அழுத்தமும் இதில் முக்கியப் பங்கு வகித்தது. அதன் காரணமாக அஜித் பவார் தான் ராஜிநாமா செய்வதற்கு முன்பாக புதன் காலையில் மும்பை நட்சத்திர விடுதி ஒன்றிலும், பின்னர் இரவு சரத் பவரின் வீட்டிலும் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. என்.சி.பி கட்சித் தலைவர்களும் அஜித்தின் செயல்பாடுகளுக்காக அவரை மன்னிக்க வேண்டும் என்று சரத் பவாரிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை செவ்வாயன்று ராஜிநாமா செய்த அஜித் பவார் மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதன் காலை நடைபெற்ற மகாராஷ்டிரா புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவிலும் அஜித் பவார் கலந்து கொண்டார். அவரை சரத் பவரின் மகளான சுப்ரியா சுலே மகிழ்ச்சியுடன் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்சியிலும் குடும்பத்திற்குள்ளும் ஏற்பட்ட சமாதானத்திற்கு பரிசாக அஜித் பவாருக்கு மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராக தலைவர் பதவி வழங்கபபடலாம் என்று தகவல்கள் வந்துள்ளது.

அதேசமயம் அவருக்கு அமைச்சர் பதவியோ அல்லது துணை முதல்வர் பதவியோ வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.