புது தில்லி: மோடியும் அமித் ஷாவும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று மஹாராஷ்டிர விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அந்தோணி எச்சரித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய் மாலை 03.30 மணியளவில் அறிவித்தார்.
மும்பையில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தனது ராஜினாமா முடிவை தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார். ஏற்கனவே துணை முதல்வர் அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸிடம் அளித்திருந்த நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர ஃபட்னவீஸும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும் ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் மோடியும் அமித் ஷாவும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று மஹாராஷ்டிர விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அந்தோணி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளராகளிடம் அவர் கூறியதாவது:
சந்தேகமே இல்லை; இது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மிகப்பெரிய பின்னடைவுதான். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை என்பதை மட்டும் உறுதியாக கூறுகிறேன். அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட தினமான இன்று இது நடந்திருப்பதுதான் மிகவும் முக்கியமானது.
தங்களால் செய்யய இயலாத ஒன்றை நடத்துவதற்காக இந்த அரசானது சிபிஐ, புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை என எல்லா வழிகளையும் பயன்படுத்தும் .
தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை - காங்கிரஸ் கூட்டணியானது மஹாராஷ்ட்ரா மக்களின் நலனுக்காக முழுமையாக உழைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


