ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட் கொலை மிரட்டல்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

News image

பினராயி விஜயன்

Updated On :15 நவம்பர் 2019, 11:45 am

கோழிக்கோடு: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம்  மாவட்டங்களில் கடந்த மாதம் நான்கு மாவோயிஸ்ட்டுகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதேபோல் 2016-ஆம் ஆண்டு கேரள முதல்வராக விஜயன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இதுவரை ஏழு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கோழிக்கோடு அருகேயுள்ள வடகரா காவல் நிலையத்திற்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், மாவோயிஸ்ட நகர்ப்புற செயல் திட்டக்  குழுவின் கபினிதல் பிரிவு துணைத்தலைவரான பேடர் மூஸா கையெழுத்திட்டுள்ளார்.       

அந்த கடிதத்தில் ஏழு மாவோயிஸ்ட்டுகளின் மரணத்திற்கு காரணமான பினராயி விஜயனின் செய்கைக்கு உரிய தணடனை வழங்கப்படும் என்றும், மக்களை தவறாக நடத்தும் விதத்திற்காக பேரம்பரா காவல் நிலைய ஆய்வாளர் ஹரீஷிற்கும்  தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.