புவனேஸ்வர்: ஃபானி புயல் புரட்டிப் போட்ட ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
ஃபானி புயல் தாக்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக பல லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றதற்காக நவீன் பட்நாயக் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, ஒடிஸாவில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், பட்நாயக் தலைமையிலான அரசு மிகச் சிறப்பான முன்னெச்சரிக்கை பணிகளை செய்துள்ளது. இதனால் உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டது.
விரைவில் மத்தியக் குழு ஒடிஸாவுக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். இதுபோன்ற மோசமான காலங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


