/

புயல் காரணமாக ஒடிஸாவில் 11 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதியில் தளர்வு

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

News image
Updated On :1 மே 2019, 9:13 am


புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஒடிஸாவின் புரி பகுதிக்கு அருகே மே 3ம் தேதி ஃபானி புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை ஒட்டியிருக்கும் பாலாசோர், கஞ்ஜம், கோர்தா, கட்டாக், ஜஜ்புர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் ஆணையத்துக்கு வைத்தக் கோரிக்கையை அடுத்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.