மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை: அனைத்தும் பழைய விடியோக்கள்: இந்திய விமானப் படை

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எந்த விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 9:05 am


புது தில்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எந்த விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் விடியோக்களும், புகைப்படங்களும் பழைய புகைப்படங்கள் என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப் படையைச் சேர்ந்த சு30-எம்கேஐ ரக விமானங்கள் வழிமறித்து விரட்டி அடித்தன. அப்போது ஒரு பாகிஸ்தான் போர் விமானம் மட்டும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய விமானப் படையின் அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத பாகிஸ்தானின் மற்ற போர் விமானங்கள் இந்திய எல்லையில் இருந்து வேகமாக வெளியேறின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முழு உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வழியாக இயக்கப்படும் விமானங்களை மாற்றுப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் லாகூர், முல்தான், பைசலாபாத், சியால்கோட், இஸ்லாமாபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதோடு பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அமிருதசரஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.