மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சிஆர்பிஎஃப் வீரர்களின் புகைப்படங்களைக் காட்டி மோடி தேர்தல் பிரசாரம்

ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடியின் பின்னணியில் புல்வாமா பயங்கரவாதத்  தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்கள் அமைந்திருந்தன.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 9:05 am


சுரு: ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடியின் பின்னணியில் புல்வாமா பயங்கரவாதத்  தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்கள் அமைந்திருந்தன.

ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சுரு பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
 

அப்போது அவர் கூறியதாவது, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்நாள். நாடு மிகவும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை இந்நாள் உறுதி செய்துள்ளது.

இந்தியாவுக்கு ஒரு சரிவு நிலை கூட ஏற்பட விட மாட்டேன் என்று உங்களுக்கு இங்கே வாக்கு அளிக்கிறேன். நாட்டை விட பெரியது இங்கே எதுவும் இல்லை என்று, இந்திய விமானப் படையினர், இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த சம்பவத்தை சூசகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட மோடி, இன்று புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருப்பதை எதிர்க்கட்சிகள் விமரிசிக்க வாய்ப்பு உள்ளது என்றே கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.