உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016, பிப்ரவரி 18ம் தேதி மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு தற்போது 50 வயது. குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.56,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இதுகுறித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் குமார் கூறுகையில், 'சுமார் 4 மாதங்களாக சிறுமி, அவரது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும், இதனை யாருக்கேனும் தெரியப்படுத்தக்கூடாது என்று அவர் சிறுமியை அச்சுறுத்தியும் வந்துள்ளார், ஒருகட்டத்தில் சிறுமி இதனை வெளியில் சொல்லவே, அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


