/

4ம் கட்டத் தேர்தல்: உத்தரப்பிரதேசத்தில் 1 மணி வரை 34% வாக்குப்பதிவு

மக்களவைக்கு நடந்து வரும் 4ம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகளில் மதியம் 1 மணி வரை 34.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
Updated On :29 ஏப்ரல் 2019, 9:18 am

மக்களவைக்கு நடந்து வரும் 4ம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகளில் மதியம் 1 மணி வரை 34.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடக்கிறது.

ஷாஹ்ஜஹான்பூர் (தனி), கெரி, உன்னாவோ உள்ளிட்ட 13 தொகுதிகளில் 2014ம் ஆண்டு தேர்தலில் கன்னௌஜ் தொகுதியில் மட்டுமே பகுஜன் சமாஜ் வெற்றி பெற்றிருந்தது. மற்ற தொகுதிகள் முழுவதும் பாஜகவே வெற்றி வாகை சூடியது. எனவே, இந்த  தேர்தலில் 13 தொகுதிகளிலும் பாஜகவே கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கி பணியாற்றியதால் இந்த 4ம் கட்டத் தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.

கன்னௌஜ் தொகுதியைத் தவிர மற்ற 12 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு மொத்தமாக 27,516 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காலை முதலே ஏராளமானோர் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.