பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ரயில்கள் மூலம் கேரளாவுக்கு படையெடுக்கும் ரோஹிங்கியா மக்கள்: கண்காணிப்பில் ஆர்பிஎஃப்

ரோஹிங்கியா மக்களின் ஊடுருவலைத் தடுக்க மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்களில் ஆர்பிஎஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :29 செப்டம்பர் 2018, 7:17 am


ரோஹிங்கியா மக்களின் ஊடுருவலைத் தடுக்க மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்களில் ஆர்பிஎஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக அளவிலான ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ரயில்கள் மூலம் படையெடுப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளாக தென்னிந்திய மாநிலத்துக்கு வரும் 14 ரயில்கள் மூலம் ஊடுருவ இருப்பதாக கேரளா மற்றும் தமிழகத்துக்கு இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையான ஆர்பிஎஃப், எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏராளமான ரோஹிங்கியா மக்கள் குடும்பம் குடும்பமாக கேரளாவுக்கு வருவதாகவும், ரயில்களில் ரோஹிங்கியா மக்களைப் பார்த்ததும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் ஆர்பிஎஃப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன அழிப்பு என்று கூறப்படும் வகையில் மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ரோஹிங்கியாக்கள் அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு தப்பித்து அங்கு குடியேறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.