புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த ரயில் பயணி ஒருவருக்கு உயிர் காக்கும் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலரின் பணி பாராட்டுக்குரியது.
புதன்கிழமை இரவு 10 மணிக்கு புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பயணியைக் காப்பாற்றுமாறு சக பயணிகள் ஜிஆர்பி காவலர் பலராம் சிங்கை அழைத்தனர். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பலராம், உடனடியாக மயங்கி விழுந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சைகளை செய்தார். அவர் மயங்கிய நிலையில் இருந்த போது, நெஞ்சுப் பகுதியில் பலமாக அழுத்தியும், வாய்ப் பகுதியில் காற்றை செலுத்தியும் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையை அளித்தார்.
இதுபோல தொடர்ந்து செய்து கொண்டே இருந்த நிலையில், சுமார் 10 - 15 நிமிடங்களில் அந்த பயணி மயக்கம் தெளிந்து கண் விழித்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வியாழக்கிழமை காலை வீடு திரும்பியுள்ளார்.
சிபிஆர் காவலர் செய்த முதலுதவி சிகிச்சையே அந்த பயணி உயிர் பிழைக்க முக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது சேவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


