கேரளத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பேராயர் ஃபிராங்கோ முலக்கலிடம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிறப்பு புலனாய்வு குழுவினர் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.
கடந்த புதன்கிழமை முலக்கல் மீதான விசாரணையைத் தொடங்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கே. சுபாஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், தொடர்ந்து 7 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, அவரது வாக்குமூலத்துக்கும், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்துக்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தொடர்ந்து நேற்றும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக சிறப்பு புலனாய்வு குழுவினர் பேராயரிடம் இன்றும் விசாரணை நடத்தினர்.
இது குறித்து கேரள அமைச்சர் ஜெயராஜன் கூறுகையில், விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் தரப்பினருடன்தான் அரசு உள்ளது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி:
தில்லியில் உள்ள ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் ஃபிராங்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
திருச்சபை பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுவிப்பு: ஜலந்தர் திருச்சபை மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாகவும், தற்காலிகமாக தன்னை விடுவிக்க வேண்டியும் பேராயர் முலக்கல், புனித போப் ஃபிரான்சிஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில், அனைத்து அசாதாரண சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, பேராயர் முலக்கலின் கோரிக்கையை போப் ஃபிரான்சிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். ஜலந்தர் திருச்சபை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும் அவரைத் தற்காலிகமாக விடுவித்துள்ளார். மாவட்டத்தின் இடைக்கால நிர்வாகப் பணிகளைப் பேராயர் ரூஃபினோ கிரேசியாஸ் கவனித்துக் கொள்வார்' என்று கத்தோலிக்க பேராயர் குழு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள் உள்பட பல்வேறு கத்தோலிக்க அமைப்பினர், போப்பின் இந்த உத்தரவை வரவேற்று, இது எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி' என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


