விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இன்று அதிகாலை கரையைக் கடந்தது தயே புயல்: ஒடிசா, ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை

ஒடிசா மாநிலம் கோபால்புர்  அருகே இன்று அதிகாலை தயே புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 7:22 am


புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் கோபால்புர்  அருகே இன்று அதிகாலை தயே புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயல் சின்னமாக மாறியதால் தயே என்று பெயரிடப்பட்டது. இது ஆந்திரப்பிரதேசத்தை ஒட்டிய ஒடிசாவின் கோபால்புர் அருகே இன்று அதிகாலை கரையைக் கடந்தது.

கரையைக் கடந்த தயே புயல் தொடர்ந்து மேற்கு வடமேற்காக நகர்ந்து மெல்ல பலவீனமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. 

மேலும் புயலின் தாக்கம் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை வரை கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வங்கக் கடலின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் கடல் பகுதி மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. 

Story image

மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதன்கிழமை மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து வியாழக்கிழமை தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடலில், ஆந்திரப் பிரதேசம், கலிங்கப்பட்டின கடலோரத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்து புயலாக மாறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.