தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஷ்மீர்: மாணவர்களைக் காக்க என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன்- பள்ளிப் பேருந்து ஓட்டுநர்

பேருந்தில் இருந்த எந்த மாணவருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சில் பாதிக்கப்பட்ட பள்ளி பேருந்தின் ஓட்டுநர் கூறியுள்ளார்.

News image

பேருந்து மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் காயமடைந்த மாணவரை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் அதிகாரிகள்.

Updated On :3 மே 2018, 8:07 am

ஷோபியான்: பேருந்தில் இருந்த எந்த மாணவருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சில் பாதிக்கப்பட்ட பள்ளி பேருந்தின் ஓட்டுநர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பள்ளிப் பேருந்து மீது கல் வீச்சு நடப்பதை அறிந்ததும், உடனடியாக வேகத்தைக் கூட்டினேன். பேருந்தில் இருந்த எந்த மாணவருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன். ஆனால், ஒரு மாணவருக்கு கல்வீச்சில் காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், ஜவுரா பகுதியில் பள்ளி குழந்தைகள் 35 பேரை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்றது. அப்போது அந்தப் பேருந்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் ரேஹன் கோர்சாய் எனும் 2ஆம் வகுப்பு மாணவன் பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தத் தாக்குதல் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது; கோழைத்தனமான மற்றும் முட்டாள்தனமான இந்தத் தாக்குதலில் தொடர்புடையோர் நீதியின் முன்நிறுத்தி தண்டிக்கப்படுவர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.