2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விலை ரூ.70 ஆயிரம்- பாஜக, ரூ.700- காங்கிரஸ், அதை நான் கடன் வாங்கினேன்- ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் அணிந்திருந்த ஜாக்கெட் தொடர்பாக தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் அதை தான் கடன் வாங்கியதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:07 pm

Raghavendran

மேகாலயாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடைகளின் விலை தொடர்பாக அவ்வப்போது காங்கிரஸ் கட்சி கடும் விமரிசனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இது சூட், பூட்டின் சர்கார் என ராகுல் தொடர்ந்து விமரிசித்து வருகிறார். அவ்வகையில் தற்போது ராகுல் அணிந்த அந்த ஜாக்கெட்டின் விலை ரூ.70 ஆயிரம் என்று பாஜக விமரிசித்துள்ளது.

மேலும் ராகுலின் ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டனின் பிரபல ஆடை நிறுவனமான 'பர்பெர்ரி'-யின் அந்த ஜாக்கெட்டின் உண்மைப் புகைப்படம் மற்றும் விலைப்பட்டியலுடன் பாஜக பதிவிட்டிருந்தது. ஆனால், இதனை மறுத்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடியின் உடை தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரான ரேணுகா சௌத்ரி கூறியதாவது:

ராகுல் அணிந்திருந்த அந்த ஜாக்கெட் தொடர்பாக பாஜக கூறியிருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இதுகுறித்து அழுவதா, சிரிப்பதா என்று கூட எனக்கு தெரியவில்லை. ராகுலின் உடை ஆராய்ச்சியில் ஈடுபடுவதை தவிர்த்து அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்பது இதன்மூலம் தெரிகிறது. 

அதுமட்டுமில்லாமல் உடை விவகாரத்தில் ராகுலை குறை கூற பாஜக-வுக்கு தகுதி இல்லை. அமெரிக்க அதிபரின் இந்திய வருகையின் போது பிரதமர் மோடி பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உடை அணிந்து பின்னர் அதனை கோடிக்கணக்கில் ஏலத்தில் விடப்பட்டது. இந்த சூட், பூட் சர்கார் தான் தற்போது ராகுலை விமரிசிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் அணிந்திருந்த அந்த ஜாக்கெட் பிடித்திருந்தால் அதனை ரூ.700-க்கு நான் வாங்கித் தருகிறேன். ஆனால் அவரின் அளவு எனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில், அந்த ஜாக்கெட்டை தான் கடன் வாங்கி அணிந்திருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.