நாங்கள் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்திருக்கவில்லை என்றால்! மெஹபூபா முஃப்தி பேச்சு
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது நாங்கள் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்திருக்கவில்லை என்றால் தற்போது....


ஜம்மு-காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பிடிபி கட்சி பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக நிலைமை பிடிபி கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மெஹபூபா முஃப்தி, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்தது. ஆனால் அவர்களால் எல்லைப் பிரச்னை தொடர்பான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதன் பின்னர் தற்போது நடைபெற்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆட்சி அமைத்தது. எனவே நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்தோம்.
அதில் எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. இந்த கூட்டணி அமைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் இந்த கூட்டணி அரசாங்கத்தால் இங்குள்ள மக்கள் மாற்றத்தை உணர்கின்றனர்.
பாஜக என்ற ஒற்றை காரணத்துக்காக நாங்கள் இந்த கூட்டணியை நிராகரித்திருந்தால் அது மிகவும் முட்டாள்தனமாக அமைந்திருக்கும். மக்களின் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டு நாங்கள் எப்படி மறுபடியும் அவர்களின் முகத்தில் முழிப்பது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் தான் இங்கு போச்சுவார்த்தைகள் நல்ல முறையில் துவங்கி நடைபெற்றன. அவை சரியான திசையை எட்டும்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பிறகு அவர்கள் அந்த நடவடிக்கைகளை அப்படியே கைவிட்டு விட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் எந்த அக்கறையும் காட்டாத காரணத்தால் அவற்றில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...